திருப்பாலைக்குடி அரசு பள்ளிக்கு கல்வி சீர்வரிசை


திருப்பாலைக்குடி அரசு பள்ளிக்கு கல்வி சீர்வரிசை
x
தினத்தந்தி 9 July 2023 12:15 AM IST (Updated: 9 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருப்பாலைக்குடி அரசு பள்ளிக்கு கல்வி சீர்வரிசை வழங்கப்பட்டது.

ராமநாதபுரம்

ஆர்.எஸ்.மங்கலம்,

ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா திருப்பாலைக்குடி காந்திநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2023-2024-ம் கல்வி ஆண்டில் புதியதாக 1 முதல் 5-ம் வகுப்பு வரை சேர்ந்துள்ள மாணவர்களுக்கு வரவேற்பு விழா நடந்தது. பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜூ தலைமையில் ஆசிரியர்கள் மதிஜெசிந்தா சார்லட், முத்துமாரி, சந்திரா, அன்பின்அமலன் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ராணி ஆகியோர் முன்னிலையில் காந்திநகர் மாரியம்மன் கோவிலில் வைத்து மாணவ, மாணவிகளுக்கு மாலை அணிவித்து மேளதாளத்துடன் பள்ளிக்கு அழைத்து வரப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து காந்திநகர் கிராம நிர்வாகிகள் தலைமையில் ஊர்பொதுமக்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் முன்னிலையில் பள்ளிக்கூடத்துக்கு தேவையான ரூ.3 லட்சம் மதிப்பிலான மேஜை, நாற்காலிகள், தண்ணீர் தொட்டிகள், பிளாஸ்டிக் குப்பைத்தொட்டிகள் உள்ளிட்ட பொருட்கள் 3 டிராக்டரில் பள்ளிக்கூடத்துக்கு கொண்டு வந்தனர். இந்நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் வினோத், செந்தமிழ்செல்வி, பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story