திருப்பாம்புரம் செருகுடி சாலையை சீரமைக்க வேண்டும்


திருப்பாம்புரம் செருகுடி சாலையை சீரமைக்க வேண்டும்
x

திருப்பாம்புரம் செருகுடி சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருவாரூர்

குடவாசல்:

திருப்பாம்புரம் செருகுடி சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

சேதமடைந்த சாலை

திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியத்தை சேர்ந்த திருப்பாம்புரம், செருகுடி, சுரைக்காயூர், கிள்ளியூர், ஆலத்தூர் ஆகிய பகுதிகள் குடவாசலில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இப்பகுதி மக்கள் குடவாசலுக்கு வர திருப்பாம்புரம், செருகுடி, எரவாஞ்சேரி, வழியாகதான் வரவேண்டும்.

திருப்பாம்புரம், செருகுடி சாலை சேதமடைந்து குண்டும்- குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் மக்கள் மிகுந்த இடையூறுகளை சந்திக்கிறார்கள்.

விவசாயிகளுக்கு சிரமம்

திருப்பாம்புரத்தில் பிரசித்தி பெற்ற ராகு தலம் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். இவ்வாறு வரும் பக்தா்கள் இந்த சாலை வழியாக தான் வந்து செல்ல வேண்டும். சாலை சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள்.

குறிப்பாக இந்த சாலை வழியாக பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், அரசு அலுவலர்கள், விவசாயிகள் அதிகம் சென்று வருகிறார்கள். இவர்கள் குண்டும்- குழியுமான சாலையில் செல்லும் போது மிகுந்த இடையூறுகளை சந்திக்கிறார்கள்.

விவசாயிகள் தங்கள் விளைவித்துள்ள நெல் மற்றும் தானியங்களை வீட்டுக்கு எடுத்து வரும் போதும் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. எனவே இப்பகுதி மக்கள் நலன் கருதி திருப்பாம்புரம் செருகுடி சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story