திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் திருப்பணி தொடக்கம்


திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் திருப்பணி தொடக்கம்
x

கும்பாபிஷேகத்தையொட்டி திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் திருப்பணி தொடங்கப்பட்டது.

கடலூர்

நெல்லிக்குப்பம்,

கடலூரை அடுத்த திருவந்திபுரத்தில் பிரசித்தி பெற்ற தேவநாதசாமி கோவில் உள்ளது. 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்ற இக்கோவிலுக்கு கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்வாா்கள்.

இக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்றது. இதையடுத்து தற்போது மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிா்வாகத்தினர் முடிவு செய்தனர்.

கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த ஜூன் மாதம் 5-ந்தேதி கோவிலில் பாலாலயம் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று கோவிலில் திருப்பணி தொடங்கியது. இதில் கோவிலில் பெருமாள் சன்னதி கோபுரம், தாயார் சன்னதி கோபுரங்களை சுற்றி வலைகள் அமைத்து சாரம் கட்டும் பணியில் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் பழமை வாய்ந்த சிற்பங்கள், கருங்கற்கள் மற்றும் பழமை வாய்ந்த பொருட்களில் மிக கவனமாக பாதுகாப்பு தன்மையுடன் பணிகள் மேற்கொள்ளும் நடவடிக்கையில் பணியாளர்கள் ஈடுபட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் உத்தரவிட்டு கண்காணித்து வருகின்றனர். திருப்பணி விரைவில் முடித்து கும்பாபிஷேகம் நடைபெற அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story