திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில் தேரோட்டம்


திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில் தேரோட்டம்
x
தினத்தந்தி 2 Jun 2023 12:15 AM IST (Updated: 2 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

சிவகங்கை

திருப்பத்தூர்

திருவண்ணாமலை ஆதினத்திற்குட்பட்ட பிரான்மலை வகை ஐந்து திருக்கோவில்களில் ஒன்றாக உள்ளது திருப்பத்தூர் சிவகாமி சுந்தரி உடனுறை திருத்தளிநாதர் கோவில். இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி பெருந்திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு விழா கடந்த மாதம் 24-ந் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் இரவு வெள்ளி கேடகம், பூதம், அன்னம், யானை, வெள்ளி ரிஷபம், கைலாயம், சிம்மம், குதிரை ஆகிய வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு சுவாமி அருள்பாலித்தார்.

9-வது திருநாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக கோவில் அருகே சுவாமி, அம்பாள் மற்றும் விநாயகர் தேர் தனித்தனியாக அலங்கரிக்கப்பட்டு தயாராக இருந்தது. காலை 5.10 மணிக்கு அந்த தேர்களில் சாமி, அம்பாள், விநாயகர் எழுந்தருளினர். பின்னர் மாலை 4.15 மணிக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் திருப்பத்தூர் நகரை சுற்றி வந்து மாலை 6.45 மணிக்கு நிலையை வந்தடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். இன்று காலை கோவில் தீர்த்தத்தில் தீர்த்தம் வழங்குதல் நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு தெப்பத்திருவிழா நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.


Next Story