திருப்பத்தூர் மாவட்டத்தில் 9,74,819 வாக்காளர்கள் உள்ளனர்


திருப்பத்தூர் மாவட்டத்தில் 9,74,819 வாக்காளர்கள் உள்ளனர்
x

திருப்பத்தூர் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் அமர் குஷ்வாஹா வெளியிட்டார். அதன்படி 9,74,819 வாக்காளர்கள் உள்ளனர்.

திருப்பத்தூர்

வாக்காளர் பட்டியல் வெளியீடு

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான அமர்குஷ்வாஹா நேற்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இறுதி வாக்காளர் பட்டியலின்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளிலும் கடந்த 9.11.2022 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளிடப்பட்டது. அதில் 9 லட்சத்து 76 ஆயிரத்து 841 வாக்காளர்கள் இருந்தனர்.

9,74,819 வாக்காளர்கள்

அதைத்தொடர்ந்து நடந்த சிறப்பு சுருக்கத்திருத்த முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் அடிப்படையில் 15 ஆயிரத்து 613 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். 17 ஆயிரத்து 635 பேரின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டும் உள்ளது.

தற்போது வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் 4,78,800 ஆண் வாக்காளர்களும், 4,95,890 பெண் வாக்காளர்களும், இதர பாலினத்தவர்கள் 129 பேரும் என மொத்தம் 9,74,819 வாக்காளர்கள் உள்ளனர் என்றார்.

தொகுதி வாரியாக

தொகுதி வாரியாக வாக்காளர்கள் விவரம் வருமாறு:-

திருப்பத்தூர்:- ஆண் வாக்காளர்கள்-1,19,512, பெண் வாக்காளர்கள்- 1,21,279, இதர பாலினத்தவர்கள்-33. மொத்த வாக்காளர்கள்-2,40,824.

ஜோலார்பேட்டை:- ஆண் வாக்காளர்கள்- 1,19,179, பெண் வாக்காளர்கள்- 1,22,068, இதர பாலினத்தினர்கள்-14. மொத்த வாக்காளர்கள்-2,41,261.

வாணியம்பாடி:- ஆண் வாக்காளர்கள்- 1,24,961, பெண் வாக்காளர்கள்- 1,29,492, இதர பாலினத்தவர்கள்- 46. மொத்த வாக்காளர்கள்-2,54,499.

ஆம்பூர்:- ஆண் வாக்காளர்கள்- 1,15,148, பெண் வாக்காளர்கள்-1,23,051, இதர பாலினத்தினர்கள்-36. மொத்த வாக்காளர்கள்-2,38,235.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இ.வளர்மதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, தேர்தல் தாசில்தார் மோகன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story