திருப்பத்தூர் வட்டார அளவிலான இளைஞர் திறன் திருவிழா


திருப்பத்தூர் வட்டார அளவிலான இளைஞர் திறன் திருவிழா
x

திருப்பத்தூர் வட்டார அளவிலான இளைஞர் திறன் திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு வேலைவாய்ப்பு பயிற்சி அளித்திடும் வகையில் நாளை (வெள்ளிக்கிழமை) திருப்பத்தூர் வட்டார அளவிலான இளைஞர் திறன் திருவிழா திருப்பத்தூர் தூயநெஞ்ச கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. இத்திருவிழாவில் 10-க்கும் மேற்பட்ட அரசு துறை பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது பயிற்சிக்கு தேவையான இளைஞர்கள் மற்றும் மகளிரை தேர்வு செய்ய உள்ளனர்.

இதில் 8-ம் வகுப்பு முதல் பட்ட படிப்பு மற்றும் தொழில் நுட்ப கல்வி தகுதி பெற்ற இளைஞர்கள் (ஆண், பெண் இருபாலர்) கலந்து கொள்ளலாம். இதில் இளைஞர்கள் மற்றும் மகளிர் தங்களுடைய கல்விச் சான்றிதழ் நகல், குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை நகலுடன் கலந்து கொண்டு தங்களுக்கேற்ற வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சியினை பெறலாம்.

எனவே விருப்பமுள்ள இளைஞர்கள் தவறாமல் கலந்துக்கொண்டு பயனடையலாம். பயிற்சியின்போது உணவு, சீருடை மற்றும் உறைவிடம், பயிற்சி புத்தகங்கள் அனைத்தும் அரசு நிதியின்கீழ் வழங்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தின் 3-வது தளத்தில் உள்ள தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்க சி பிரிவு மகளிர் திட்ட அலுவலகத்தில் நேரிலோ அல்லது தொலைப்பேசி மூலமோ தொடர்பு கொள்ளலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


Next Story