திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம்


திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம்
x

திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார் தலைமையில் நடந்தது. மாவட்ட ஊராட்சி செயலர் ஆப்தாப் பேகம் வரவேற்றார்.

கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் பிரியதர்ஷினி ஞானவேலன், உறுப்பினர்கள் சரிதா, சசிகலா, ஜெயா, முனிவேல், சுபாஷ்சந்திரபோஸ், சுப்பிரமணி, குணசேகரன், சத்யவாணி உள்ளிட்டோர் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

கூட்டத்தில் தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார் பேசுகையில், '15-வது நிதிக்குழு மானியத்தில் ரூ.2 கோடியே 48 லட்சத்தில் அனைத்து வார்டுகளுக்கும் பகிர்ந்து அளித்து திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. திட்டப்பணி விவரங்களை அனைத்து உறுப்பினர்களும் விரைவாக அளிக்க வேண்டும். மேலும் அனைத்து பகுதிகளிலும் உள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்' என்றார்.

கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டனர்.


Next Story