பயோமெட்ரிக் முறையில் வழங்குவதில் திருப்பத்தூர் முதலிடம்


பயோமெட்ரிக் முறையில் வழங்குவதில் திருப்பத்தூர் முதலிடம்
x

ரேஷன் பொருட்களை பயோமெட்ரிக் முறையில் வழங்குவதில் திருப்பத்தூர் முதலிடம் என்று கலெக்டர் கூறினார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் வட்டம், பொம்மிகுப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் திம்மணாமுத்தூர் கடையிலிருந்து பிரித்து பம்பாகுட்டையில் பகுதி நேர ரேசன் கடை திறப்பு விழா நடந்தது.

கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமை தாங்கி கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் அ..நல்லதம்பி எம்.எல்.ஏ முன்னிலை வகித்தார்.

அப்போது கலெக்டர் பேசியதாவது:- பம்பாகுட்டை பகுதியில் புதிய பகுதி நேர ரேசன்தடை தொடங்கப்பட்டுள்ளது. செவ்வாய் மற்றும் வெள்ளிகிழமை ஆகிய நாட்களில் இக்கடை செயல்படும். மாவட்டத்தில் 345 முழு நேர கடைகளும், 224 பகுதி நேர கடைகளும் என மொத்தம் 569 நியாயவிலை கடைகள் உள்ளன. மாவட்டத்தில் 2021க்கு பிறகு இதுவரையில் 60 புதிய நியாய விலை கடைகள் திறக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலேயே பயோமெட்ரிக் முறையில் விநியோகம் செய்வதில் திருப்பத்தூர் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்த நியாய விலைக்கடையை பொது மக்கள் நல்லமுறையில் பயன்படுத்திக்கொண்டு தங்களுக்கு தேவையான குடிமைப்பொருட்களை வாங்கி பயன்பெற வேண்டும் என பேசினார்.

அப்போது அப்பகுதியை சேர்ந்த கண்ணம்மாள் கூறுகையில் எனக்கு 67 வயதாகிறது. நான் ரேசன் பொருட்களை வாங்க 5 கிலோ மீட்டர் நடந்து சென்று வாங்கிய நிலையில் தற்போது எங்கள் கிராமத்திலேயே பகுதிநேர நியாய விலைக்கடை திறந்து வைத்ததினால் நான் மிகவும் சந்தோமடைந்தேன்.

தமிழக முதல்வர் பொது மக்கள் சுமையை குறைக்கும் வகையில், இதுபோன்ற புதிய பகுதிநேர நியாய விலைக்கடைகள் துவங்குவதற்கு அனுமதி அளித்துள்ளதால் நாங்கள் காலதாமதம் இல்லாமல் பணிகளுக்கு செல்வதற்கும் எங்களிடம் இருக்கும் பணத்திற்கு ஏற்றார்போல் பொருட்களை வாங்கிகொள்வதற்கு ஏதுவாக உள்ளதால் நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்றார்.

விழாவில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் சி.பெ.முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story