திருப்பத்தூர் சர்க்கரை ஆலை பகுதியில் 70 மில்லி மீட்டர் மழை பதிவு
திருப்பத்தூர் சர்க்கரை ஆலை பகுதியில் 70 மில்லி மீட்டர் பதிவாகி உள்ளது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் திருப்பத்தூரில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து இரவு முழுவதும் மழை கொட்டி தீர்த்தது.
மழையின் காரணமாக தாழ்வான பகுதிகள், பள்ளங்களில் மழைநீர் தேங்கி நின்றது. மேலும் நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் நேற்று காலை 6 மணி வரை திருப்பத்தூர் மாவட்டத்தில் பதிவான மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
திருப்பத்தூர் சர்க்கரை ஆலை-70, நாட்டறம்பள்ளி-62, திருப்பத்தூர்-57.6, ஆலங்காயம்-49, ஆம்பூர்-43, ஆம்பூர் சர்க்கரை ஆலை-35.8, வாணியம்பாடி-32.மழை
Related Tags :
Next Story