திருப்பூர் மாநகராட்சியில் 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட் ரூ.1,438 கோடியே 76 லட்சத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ரூ.1 கோடியே 59 லட்சம் பற்றாக்குறை பட்ஜெட்டாக உள்ளது.
திருப்பூர் மாநகராட்சியில் 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட் ரூ.1,438 கோடியே 76 லட்சத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ரூ.1 கோடியே 59 லட்சம் பற்றாக்குறை பட்ஜெட்டாக உள்ளது.
திருப்பூர்
திருப்பூர் மாநகராட்சியில் 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட் ரூ.1,438 கோடியே 76 லட்சத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ரூ.1 கோடியே 59 லட்சம் பற்றாக்குறை பட்ஜெட்டாக உள்ளது.
ரூ.1,438¾ கோடிக்கு பட்ஜெட்
திருப்பூர் மாநகராட்சி 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டம் நேற்று காலை மாநகராட்சி மைய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. நிதிக்குழு தலைவர் கோமதி குமார் பட்ஜெட் புத்தகத்தை மேயர் தினேஷ்குமாரிடம் வழங்கினார். துணை மேயர் மேயர் பாலசுப்பிரமணியம், ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
காலை 10.25 மணிக்கு நிதிக்குழு தலைவர் கோமதி குமார் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசியதாவது:-
திருப்பூர் மாநகராட்சியின் பயன்பாட்டு குறிக்கோளுடன் கூடிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. 2023-24-ம் ஆண்டுக்கான வருவாய் நிதி வரவினம் ரூ.887 கோடியே 36 லட்சமாகும். குடிநீர் நிதி வரவினம் ரூ.540 கோடியே 16 லட்சம். ஆரம்ப கல்விநிதி வரவினம் ரூ.9 கோடியே 65 லட்சம் என மொத்த வரவினம் ரூ.1,437 கோடியே 17 லட்சமாகும்.
ரூ.1 கோடியே 59 லட்சம் பற்றாக்குறை
இதில் வருவாய் செலவினமாக ரூ.882 கோடியே 57 லட்சம், குடிநீர் நிதி செலவினம் ரூ.549 கோடியே 2 லட்சம், ஆரம்ப கல்வி நிதி செலவினம் ரூ.7 கோடியே 17 லட்சம் என மொத்தம் ரூ.1,438 கோடியே 76 லட்சமாகும். ரூ.1 கோடியே 59 லட்சம் பற்றாக்குறையாக உள்ளது. இந்த பற்றாக்குறை விரைவில் சரி செய்யப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.