ஊரக வளர்ச்சித்துறை பணிகளை கலெக்டர் ஆய்வு


ஊரக வளர்ச்சித்துறை பணிகளை கலெக்டர் ஆய்வு
x

ஊரக வளர்ச்சித்துறை பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

திருவள்ளூர்

திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட பழையனூர், திருவாலங்காடு, ஜாகீர்மங்கலம், வீரராகவபுரம், அத்திப்பட்டு, முத்துக்கெண்டாபுரம் உள்ளிட்ட ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் தேசிய ஊரக உறுதி திட்ட நிதியில் செய்யப்படும் திட்டப்பணிகளை ஆய்வு செய்தார். ஆய்வில் சாலைகள், கால்வாய், குளம் சீரமைப்பு உள்பட பல பணிகளை நேரில் ஆய்வு செய்தார். மேலும் உரிய காலத்திற்குள் முடிக்கப்படாத பணிகள் குறித்து அலுவலரிடம் கேட்டறிந்து விரைந்து தீர்வு காணும்படி அறிவுறுத்தினார். இதனையடுத்து திருவாலங்காட்டில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது கூடுதல் கலெக்டர் சி.ஏ.ரிஷப், திருவாலங்காடு வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கல்வித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.


Next Story