திருவள்ளூர் மேற்கு மாவட்ட அ.தி.முக. பொதுக்கூட்டம்


திருவள்ளூர் மேற்கு மாவட்ட அ.தி.முக. பொதுக்கூட்டம்
x

பேரம்பாக்கத்தில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர்

திருவள்ளூர்,

திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கத்தில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்துக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ஆர்.டி.இ.சந்திரசேகர் தலைமை தாங்கினார். திருவள்ளூர் மேற்கு மாவட்ட துணை செயலாளர் கமாண்டோ பாஸ்கர், மாவட்ட இணை செயலாளர் விஜயலட்சுமி ராமமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் சூரகாபுரம் கே.சுதாகர், சக்திவேல், பூண்டிமாதவன், நகர செயலாளர் கந்தசாமி, ஒன்றிய தலைவர் சிற்றம் ஜெ.சீனிவாசன், ஒன்றிய துணை செயலாளர் தமிழ்ச்செல்வி ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக அ.தி.மு.க.வின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா, முன்னாள் எம். பி.யும், மருத்துவர் அணி செயலாளருமான டாக்டர் பி.வேணுகோபால், தலைமை பேச்சாளர் அருள்மணி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இதில் திரளான அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story