திருவண்ணாமலை ஹோஸ்ட் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா


திருவண்ணாமலை ஹோஸ்ட் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா
x

திருவண்ணாமலை ஹோஸ்ட் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை ஹோஸ்ட் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.

திருவண்ணாமலை ஹோஸ்ட் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அரிமா சங்க பன்னாட்டு இயக்குனர் (இசைவு) எஸ்.மகேஷ் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை பதவியில் அமர்த்தி விழா பேருரை ஆற்றினார். இதில் ஹோஸ்ட் அரிமா சங்க தலைவராக சாயர் எம்.தர்ஷன் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் செயலாளராக என்.சாய்குமார், பொருளாளராக வி.ஆனந்த் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

விழாவில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். அரிமா சங்க கவர்னர் ஆர்த்தீஸ்வரி ராஜேந்திரன், முன்னாள் கவர்னர்கள் டாக்டர் ஜி.நரசிம்மன், சாயர் அரவிந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இணை அவைச்செயலாளர் சுபம் பழனி, மண்டல தலைவர் நடராஜ், வட்டாரத் தலைவர் ரமேஷ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

இதில் அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர்கள் வீணா, தயகர் யாதுல்லா பல் மருத்துவர் இன்பநேசன் மற்றும் சேவியர் பத்மநாபன், அப்பல்லோ மருத்துவமனை அனந்த லட்சுமி ஜெயக்குமார் ஆகியோரின் மருத்துவ சேவைகளை பாராட்டி பெ.சு.தி.சரவணன் எம்.எல்.ஏ. சால்வைஅணிவித்துபரிசுகள்வழங்கினார். முன்னதாகநிகழ்ச்சிக்குதலைவர்ஏ.ஜி.ராஜ்குமார்தலைமைதாங்கினார். செயலாளர்என்.நாதன்வரவேற்றார். செயலாளர்சாய்குமார்நன்றிகூறினார்.


Next Story