த.மா.கா. சார்பில் கையெழுத்து இயக்கம்
நெல்லையில் த.மா.கா. சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
திருநெல்வேலி
தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி சார்பில், பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. நெல்லை மத்திய மாவட்ட இளைஞர் அணி தலைவர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். நெல்லை மத்திய மாவட்ட தலைவர் சுத்தமல்லி முருகேசன், கிழக்கு மாவட்ட தலைவர் வீரை மாரித்துரை ஆகியோர் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் மாநில சிறுபான்மை பிரிவு துணைத்தலைவர் ரமேஷ் செல்வன், கிழக்கு மாவட்ட செயலாளர் துரைராஜ், வீரவநல்லூர் நகர தலைவர் அனந்தராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story