தமிழகத்தில் மேலும் 2,446- பேருக்கு கொரோனா பாதிப்பு


தமிழகத்தில் மேலும் 2,446- பேருக்கு கொரோனா பாதிப்பு
x

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது.

சென்னை,

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அந்த வகையில் இன்றைய கொரோனா பாதிப்பும் நேற்றை விட குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 2,446- ஆக பதிவாகியுள்ளது. நேற்று பாதிப்பு 2,537- ஆக பதிவானது. கொரோனா சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 18,819-ல் இருந்து 18,802 ஆக குறைந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2,465- ஆக உள்ளது. தலைநகர் சென்னையில் இன்று 796 -பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

1 More update

Next Story