தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு


தமிழகத்தில்  கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு
x

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,500- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று ஒருநாள் பாதிப்பு 2,385- ஆக உயர்ந்த நிலையில் இன்றைய பாதிப்பு 2,500 ஐ தாண்டியுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: -

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,533 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 13,319- ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1,372- ஆகும். தலைநகர் சென்னையில் நேற்று 1,025-பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 1,059- ஆக பாதிப்பு உயர்ந்துள்ளது.


Next Story