தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று சற்று அதிகரிப்பு


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று சற்று அதிகரிப்பு
x

தமிழகத்தில் நேற்று கொரோனா பாதிப்பு 37 பேருக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று பாதிப்பு அதிகரித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

தமிழகத்தில் புதிதாக 14 ஆயிரத்து 339 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஆண்கள் 28 பேரும், பெண்கள் 18 பேரும் உள்பட 46 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 9 மாவட்டங்களில் மட்டும் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. 29 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை.

மேலும் 13 மாவட்டங்கள் கொரோனாவே இல்லாத மாவட்டங்களாக உருவாகியுள்ளது. தமிழகத்தில் 65-வது நாளாக எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை. 40 பேர் கொரோனா நோயில் இருந்து குணமடைந்து இன்று 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story