இளைஞர்களுக்கு இலவச டி.என்.பி.எஸ்.சி. வழிகாட்டி புத்தகம்


இளைஞர்களுக்கு இலவச டி.என்.பி.எஸ்.சி. வழிகாட்டி புத்தகம்
x
தினத்தந்தி 28 March 2023 12:30 AM IST (Updated: 28 March 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

இளைஞர்களுக்கு இலவச டி.என்.பி.எஸ்.சி. வழிகாட்டி புத்தகம் வழங்கப்பட்டது.

நாகப்பட்டினம்

நாகையில் யாதவர் நலச்சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாநில பொதுச்செயலாளர் ராகவன் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் ஜெயராமன், மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அமைப்பாளர் வீரையன் வரவேற்றார். இதை நிறுவனர் இளஞ்சோழன் தொடங்கி வைத்தார். இதில் டி.என்.பி.எஸ்.சி. வழிகாட்டி புத்தகங்கள் இளைஞர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச தையல் எந்திரங்கள் வழங்கப்பட்டன. சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தி இறுதி முடிவு எடுக்கும் வரை யாதவ இனத்தவர்களை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் அறிவிக்க வேண்டும். ஆதரவற்ற கிராமப்புற ஏழை விதவைப் பெண்களின் முன்னேற்றத்திற்கு தனியாக வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இதில் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணைத்தலைவர் செல்வராசு நன்றி கூறினார்.


Next Story