டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு வினாத்தாள்கள் தேனி வருகை


டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு வினாத்தாள்கள் தேனி வருகை
x

2 நாட்கள் நடைபெற உள்ள டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு வினாத்தாள்கள் தேனி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தது.

தேனி

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில், இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் நிலை-3 பதவிக்கான குரூப்-7 'பி' தேர்வு நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது. இதேபோல் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் நிலை-4 பதவிக்கான குரூப்-8 தேர்வு வருகிற 11-ந்தேதி நடைபெற உள்ளது.

தேனி மாவட்டத்தில் குரூப்-7 'பி' தேர்வை 1,680 பேர் எழுத உள்ளனர். இந்த தேர்வுக்காக 6 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குரூப்-8 தேர்வை 2,080 பேர் எழுத உள்ளனர். அதற்காக 7 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வுகளுக்காக 13 தேர்வு மைய கண்காணிப்பாளர்கள், 188 தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வுக்கான வினாத்தாள்களை எடுத்துச் செல்வதற்கு 6 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் நேற்று பலத்த பாதுகாப்புடன் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டன. மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அன்பழகன் ஆகியோர் முன்னிலையில் மினிவேனில் இருந்து வினாத்தாள்கள் இறக்கப்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன. அந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.


Next Story