டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு- கலெக்டர் ஆஷா அஜீத் வழங்கினார்
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் ஆஷா அஜீத் பரிசு வழங்கினார்.
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் ஆஷா அஜீத் பரிசு வழங்கினார்.
வழிகாட்டுதல் நிகழ்வு
சிவகங்கை படிப்பு வட்டம் சார்பில் அனைத்து போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவிகளுக்கு பயன்படும் வகையில் போட்டித்தேர்வர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்வு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முகமை கூட்டஅரங்கில் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார்.
கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) வீரராகவன் வரவேற்று பேசினார்.
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் மோகன சந்திரன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மணிகணேஷ் மற்றும் பலர் பேசினார்கள்.
முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரிகள் ரம்யா ரோஷ்னி, அருண் ஆகியோர் போட்டித்தேர்வு உரையாற்றினார்கள். இதில் பங்கேற்ற போட்டித் தேர்வர்களின் அனைத்து சந்தேகங்களுக்கும், வினாக்களுக்கும் அவர்கள் விளக்கம் அளித்தனர்.
பரிசு
அதேபோல், சிவகங்கை படிப்பு வட்டம் மற்றும் காரைக்குடி படிப்பு வட்டங்களில் கடந்த 2022-ம் ஆண்டு படித்து டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்ற 20 வெற்றியாளர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்.