தண்ணீர் திறப்பு தேதியை அறிவிக்கக்கோரிகீழ்பவானி வாய்க்காலில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
தண்ணீர் திறப்பு தேதியை அறிவிக்கக்கோரி கீழ்பவானி வாய்க்காலில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோபி
தண்ணீர் திறப்பு தேதியை அறிவிக்கக்கோரி கீழ்பவானி வாய்க்காலில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கீழ்பவானி வாய்க்கால்
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய பாசன வாய்க்காலாக இருக்கும், பவானிசாகர் வாய்க்காலில் கான்கிரீட் தளமோ, கரையோ அமைக்க கூடாது என்று விவசாயிகளில் ஒரு தரப்பினர் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் கோபி அருகே உள்ள திங்களூர் நல்லாம்பட்டியில் நேற்று கீழ்பவானி வாய்க்காலில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு கீழ்பவானி பாசன சங்க உறுப்பினர் ரவி தலைமை தாங்கினார்.
முற்றுகையிடுவோம்...
தமிழக விவசாய சங்க செயலாளர் செங்கோட்டையன், ஆர்ப்பாட்டத்தில் பேசினார்,
அப்போது அவர், 'ஆகஸ்டு 15-ந் தேதி கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படும் என்று அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார்.
அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 10-ந்தேியில் இருந்து 15-ந் தேதிக்குள் தண்ணீர் திறக்கப்படும் என்று அறிவிக்க வேண்டும். இல்லை என்றால் ஆகஸ்டு 11-ந் தேதி ஈரோட்டில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தை ஏராளமானோர் திரண்டு சென்று முற்றுகையிடுவோம்' என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர்.