வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுப்பதற்காக பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் காத்திருந்த பொதுமக்கள்-வெயிலில் நீண்ட நேரம் நின்றதால் கடும் அவதி


வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுப்பதற்காக பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் காத்திருந்த பொதுமக்கள்-வெயிலில் நீண்ட நேரம் நின்றதால் கடும் அவதி
x
தினத்தந்தி 23 Aug 2023 12:15 AM IST (Updated: 23 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு 460 பேர் மனு கொடுத்தனர். இதற்கிடையில் நுழைவு வாயிலுக்கு வெளியே வெயிலில் காத்திருக்க வைத்ததால் கடும் அவதிப்பட்டனர்.

கோயம்புத்தூர்


பொள்ளாச்சி


பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு 460 பேர் மனு கொடுத்தனர். இதற்கிடையில் நுழைவு வாயிலுக்கு வெளியே வெயிலில் காத்திருக்க வைத்ததால் கடும் அவதிப்பட்டனர்.


வீட்டுமனை பட்டா


ஒவ்வொரு பயனாளிக்கும் ஆண்டு முழுவதும் 100 நாள் வேலை சட்டப்படி வேலை வழங்கவும், அதை உறுதிப்படுத்தவும் வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட நாள் கூலி ரூ.294-ஐ தாமதமின்றி பயனாளிக்கு வழங்கவும், வேலை கேட்டு மனு கொடுப்பவர்களுக்கு 15 நாட்களுக்குள் வழங்க வேண்டும். சொந்த வீடு, நிலமற்ற விவசாய தொழிலாளர்களுக்கும், ஏழைகளுக்கும் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் சப்-கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுக்கும் பெருந்திரள் இயக்கம் நேற்று நடைபெற்றது. இதில் ஒன்றிய செயலாளர் பட்டீஸ்வரமூர்த்தி, மாவட்ட பொருளாளர் மகாலிங்கம், மாதர் சங்க செயலாளர் ரேவதி மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதற்கிடையில் சப்-கலெக்டர் அலுவலகத்திற்குள் மனு கொடுக்க 5 பேர் வீதம் போலீசார் உள்ளே அனுமதித்தனர். மேலும் யாரும் அத்துமீறி செல்வதை தடுக்க போலீசார் தடுப்புகள் வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


சூளேஸ்வரன்பட்டி, ஜமீன்ஊத்துக்குளி, பொள்ளாச்சி நகரம், நாயக்கன்பாளையம், அரசம்பாளையம் உள்பட பொள்ளாச்சி, கிணத்துக்கடவு தாலுகா பகுதிகளை சேர்ந்த சுமார் 460 பேர் வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுத்தனர்.


கடும் அவதி


இந்த நிலையில் சப்-கலெக்டர் அலுவலகத்தில் போதிய இடவசதி இருந்தும், மனு கொடுக்க வந்த பெண்களை போலீசார் சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே நிறுத்தி வைத்தனர்.


இதனால் பெண்கள் குழந்தைகளுடன் வெயிலில் நீண்ட நேரம் காத்திருந்ததால் கடும் அவதிப்பட்டனர். இதை தொடர்ந்து மனு கொடுத்துவிட்டு சப்-கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கலைந்து சென்றனர்.



Next Story