பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி வழியாக இயக்க வேண்டும்


பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி வழியாக இயக்க வேண்டும்
x
தினத்தந்தி 19 Aug 2023 6:45 PM GMT (Updated: 19 Aug 2023 6:45 PM GMT)

கொல்லம்-திருப்பதி ரெயிலை பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி வழியாக இயக்க வேண்டும் என ரெயில் உபயோகிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி:

கொல்லம்-திருப்பதி ரெயிலை பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி வழியாக இயக்க வேண்டும் என ரெயில் உபயோகிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோரிக்கை மனு

திருவாரூர் மாவட்ட ெரயில் உபயோகிப்பாளர்கள் சங்க மாவட்ட தலைவர் வக்கீல் நாகராஜன், செயலாளர் எடையூர் மணிமாறன் ஆகியோர் ெரயில்வே கோட்ட மேலாளருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

மத்திய ெரயில்வே வாரியம் கொல்லம்-திருப்பதி இடையே ெரயில் இயக்க முடிவு செய்துள்ளது.திருவாரூர்- காரைக்குடி அகல ெரயில் பாதையில் ரூ. 1500 கோடி செலவில் ெரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு குறைந்த அளவு ெரயில்கள் இயக்கப்படுகின்றன.

கொல்லம்-திருப்பதி ரெயில்

சென்னை-காரைக்குடி பாரம்பரிய தினசரி ெரயிலும் மீண்டும் இயக்கப்படாமல் பொது மக்களின் கோரிக்கையை ெரயில்வே துறை கிடப்பில் போட்டுவிட்டது. கொல்லம்-திருப்பதி ெரயில் கோட்டையம், சங்கனச்சேரி, புனலூர், செங்கோட்டை, தென்காசி, மானாமதுரை, காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை மற்றும் திருத்துறைப்பூண்டி வழியாக இயக்கப்பட்டால் பக்தர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். கொல்லம்-திருப்பதி இடை 1,250 கி.மீ. நீளம் உள்ள பாதையாகும்.திருப்பதி ெரயில் மேற்படி ெரயில் தடம் வழியாக இயக்கப்பட்டால் மற்ற ெரயில் பாதைகளை விட 150 கிலோமீட்டர் பயண தூரம் குறையும். பயண நேரமும் பயணச் செலவும் மற்றும் எரிபொருள் செலவும் மிகவும் குறையும்.

லாபகரமானது

இந்த புதிய அகல ெரயில் பாதைவழித்தடத்தில் போக்குவரத்து அதிகமின்மையால் ெரயில்வே கிராசிங் காலதாமதம் இருக்காது. காரைக்குடியில் இருந்து திருத்துறைப்பூண்டி வரை உள்ள பக்தர்கள் அதிகம் பயணம் செய்ய இருப்பதால் இந்த வழித்தடம் ெரயில்வேக்கு மிகவும் லாபகரமாக இயங்கக் கூடியது என்று ெரயில்வே பயண பாதை ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி மக்களுக்கு. திருப்பதி செல்ல நேரடியாக ெரயில் வசதியோ, பஸ் வசதியோ இல்லாமல் மிகவும் சிரமப்பட நேரிடுகிறது.

டெல்டா பகுதி

பக்தர்கள் தவிர கொல்லம் மதுரையில் இருந்து வியாபாரிகள் புளி கடுகு, மிளகு போன்ற மளிகை பொருட்களை குறைந்த விலைக்கு வாங்கி வந்து காவிரி டெல்டா பகுதியில் விற்பனை செய்ய அதிக வாய்ப்பு உள்ளது.

கேரளாவில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கும் இந்த ெரயில் தடம் மிகவும் பயன்படும்.தென்னக ெரயில்வே துறை உடனடியாக செயல்பட்டு கொல்லம்- திருப்பதி ெரயிலை பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி வழியாக வந்தே பாரத் ெரயிலாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story