ஈரோடு கிழக்கு தொகுதியில் பயன்படுத்தப்பட உள்ளமின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணி;மாவட்ட தேர்தல் அதிகாரி கிருஷ்ணனுண்ணி ஆய்வு


ஈரோடு கிழக்கு தொகுதியில் பயன்படுத்தப்பட உள்ளமின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணி;மாவட்ட தேர்தல் அதிகாரி கிருஷ்ணனுண்ணி ஆய்வு
x

ஈரோடு கிழக்கு தொகுதியில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணியை மாவட்ட தேர்தல் அதிகாரி கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்தார்.

ஈரோடு

ஈரோடு கிழக்கு தொகுதியில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணியை மாவட்ட தேர்தல் அதிகாரி கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்தார்.

இடைத்தேர்தல்

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 27-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் 52 இடங்களில் மொத்தம் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இந்த நிலையில் வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி நேற்று தொடங்கியது.

ஈரோடு ஆர்.டி.ஓ. அலுவலக வளாகத்தில் உள்ள, இந்திய தேர்தல் ஆணையத்தின் ஈரோடு மாவட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை, அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில், ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான கிருஷ்ணனுண்ணி நேற்று திறந்து பார்வையிட்டார்.

ஆய்வு

பின்னர் அவர், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பெல் நிறுவனத்தின் மென் பொறியாளர்கள் சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர். மொத்தம் 8 மென் பொறியாளர்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் ஏற்கனவே பதிவான பதிவுகள், எந்திரத்தின் செயல்பாடு, கட்டுப்பாட்டு எந்திரத்தின் செயல்பாடு, யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்வதற்காக பயன்படுத்தப்படும் விவிபேடு உள்ளிட்டவைகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்தனர்.

அதைத்தொடர்ந்து மாவட்ட தேர்தல் அதிகாரி கிருஷ்ணனுண்ணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

ஈரோடு கிழக்கு தொகுதியில் 238 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்காக 500 வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் விவிபேடு ஆகியவை தயார் படுத்தப்படுகிறது.

மென் பொறியாளர்கள்

இந்த எந்திரங்களின் சரிபார்ப்பு பணிகள் அரசியல் கட்சியினர் முன்னிலையில் தொடங்கப்பட்டு உள்ளது. ஒரே நாளில் இந்த பணிகளை முடிக்கும் வகையில் கூடுதல் மென் பொறியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஈரோடு கிழக்கு தொகுதியில் மட்டும் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

அவ்வப்போது தேர்தல் ஆணையம் தெரிவிக்கும் உத்தரவுகள் அமல்படுத்தப்படும். தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்கள் தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க தனியாக மையம் அமைக்கப்படும். கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் தேர்தல் நடத்தை விதிமுறையில் வருகின்றதா என்பது குறித்து தேர்தல் ஆணையத்திடம் கலந்து ஆலோசித்து பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story