பொல்லானுக்கு மணிமண்டபம் அமைக்கக்கோரி சமூகநீதி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பொல்லானுக்கு மணிமண்டபம் அமைக்கக்கோரி சமூகநீதி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

பொல்லானுக்கு மணிமண்டபம் அமைக்கக்கோரி சமூகநீதி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினாா்கள்.

ஈரோடு

ஈரோடு காளைமாட்டு சிலை அருகில், சமூகநீதி மக்கள் கட்சி மற்றும் மாவீரன் பொல்லான் வரலாறு மீட்பு குழு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சமூக நீதி மக்கள் கட்சி மற்றும் மாவீரன் பொல்லான் பேரவை தலைவர் வடிவேல் ராமன் தலைமை தாங்கினார். மாவீரன் பொல்லான் பேரவை பொதுச்செயலாளர் வி.எஸ்.சண்முகம், சமூக நீதி மக்கள் கட்சி துணைத்தலைவர் எம்.கே.ஆறுமுகம், மாவட்ட தலைவர் சதீஷ் பாபு, தலைமை நிலைய செயலாளர் ஆர்.கண்ணையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் மணிமண்டபம் அமைக்க ரூ.2 கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில் கடந்த 2 ஆண்டுகளாக நிலம் தேர்வு செய்வதில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. எனவே பொல்லான் சுட்டுக்கொல்லப்பட்ட இடமான நல்லமங்காபாளையத்தில் உள்ள 2 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தில் மணிமண்டபத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

இதில் சமூக நீதி கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கண குறிஞ்சி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ஏ.சித்திக், மாநில செயற்குழு உறுப்பினர் சாகுல்அமீது, மாவட்ட துணைச்செயலாளர் இஸ்மாயில், மருத்துவ அணி செயலாளர் சிக்கந்தர், கொங்கு விடுதலை புலிகள் கட்சி பொதுச்செயலாளர் சி.விஸ்வநாதன், ஆதித்தமிழர் முன்னேற்ற கழக மாநில துணை பொதுச்செயலாளர் பழ வீரக்குமார், திராவிட எழுச்சி பேரவை தலைவர் சக்திவேந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story