கொத்தடிமை தொழிலாளர் இல்லை என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்-கலெக்டர் விஷ்ணுசந்திரன் பேச்சு


கொத்தடிமை தொழிலாளர் இல்லை என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்-கலெக்டர் விஷ்ணுசந்திரன் பேச்சு
x

கொத்தடிமை தொழிலாளர் இல்லை என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று கலெக்டர் விஷ்ணுசந்திரன் கூறினார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் தொழிலாளர் நலத்துறை சார்பில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான ஒருநாள் பயிற்சி கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி கொத்தடிமை தொழிலாளர் முறை உள்ளதா? என்பதை மாவட்ட தொழிலாளர் நலத்துறை, வருவாய்த்துறை, குழந்தைகள் பாதுகாப்பு துறை, சமூக நலத்துறை மற்றும் பிற துறைகளும் ஒருங்கிணைந்து கண்காணித்து, கொத்தடிமை தொழிலாளர் முறை இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். அதற்கேற்ப அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உரிய பயிற்சிகளை பெற்று களப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த பயிற்சியில் தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் ராஜா, ஜப பிரின்ஸ், எசக்கியேல், மலர்விழி ஆகியோர் பணியாளர்களுக்கு கொத்தடிமை ஒழிப்பு குறித்த பயிற்சி வழங்கினர்.


Related Tags :
Next Story