ஈரோடு ஜவுளி சந்தைக்குவெளிமாநில வியாபாரிகள் வராததால் விற்பனை மந்தம்


ஈரோடு ஜவுளி சந்தைக்குவெளிமாநில வியாபாரிகள் வராததால் விற்பனை மந்தம்
x

வெளிமாநில வியாபாரிகள் வராததால் ஈரோடு ஜவுளி சந்தையில் விற்பனை மந்தமாக நடைபெற்றது.

ஈரோடு

ஈரோட்டில் வாரந்தோறும் திங்கட்கிழமை இரவில் இருந்து செவ்வாய்க்கிழமை வரை வாரச்சந்தை நடைபெறும். கனிமார்க்கெட் வளாகத்தில் உள்ள கடைகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோர்ட்டு உத்தரவின்படி அகற்றப்பட்டது. ஜவுளிக்கடைக்காரர்கள் செய்த மேல்முறையீட்டை தொடர்ந்து தற்காலிகமாக பழைய இடத்திலேயே வியாபாரம் செய்வதற்கு கோா்ட்டு அனுமதி அளித்தது. இதைத்தொடர்ந்து அகற்றப்பட்ட இடத்தில் மீண்டும் கடைகள் அமைக்கும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இந்த பணிகள் நிறைவடைய இன்னும் 3 நாட்களாகும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர். அதேசமயம் அந்த பகுதிகளில் உள்ள மற்ற கடைகளில் வியாபாரம் நடந்தது.

ஈரோடு திருவேங்கடசாமி வீதி, மணிக்கூண்டு, ஈஸ்வரன் கோவில் வீதி, காந்திஜிரோடு, சென்டிரல் தியேட்டர் மார்க்கெட் ஆகிய இடங்களில் ஏராளமான வியாபாரிகள் கடை அமைத்து இருந்தனர். அங்கு போர்வை, துண்டு, லுங்கி, உள்ளாடைகள் போன்ற ஜவுளி விற்பனை செய்யப்பட்டது. வெளிமாநில மொத்த வியாபாரிகள் வாரததால் ஜவுளி விற்பனை மந்தமாக இருந்ததாக கடைக்காரர்கள் தெரிவித்தனர்.


Next Story