மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பங்களை ஆய்வு செய்யகுழு -கலெக்டர் ஆலோசனை

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில்  விண்ணப்பங்களை ஆய்வு செய்யகுழு -கலெக்டர் ஆலோசனை
x

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் சந்தேக விண்ணப்பங்களை ஆய்வு செய்ய திருப்பத்தூர் மாவட்டத்தில் 509 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அவர்களுக்கு கலெக்டர் ஆலோசனை வழங்கினார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர்

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் சந்தேக விண்ணப்பங்களை ஆய்வு செய்ய திருப்பத்தூர் மாவட்டத்தில் 509 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அவர்களுக்கு கலெக்டர் ஆலோசனை வழங்கினார்.

குழு அமைப்பு

மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விண்ணப்பம் பதிவேற்றும் பணி நடந்து முடிந்துள்ளது. இதில் சந்தேகம் ஏற்படுத்தக் கூடிய விவரங்கள் அளித்த விண்ணப்பதாரர்களை நேரில் சந்தித்து சந்தேகங்களை ஆய்வு செய்து, அதன் பின்னர் அந்த விண்ணப்ப விவரங்களை மீண்டும் அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் தாலுகா வாரியாக கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள், உள்ளாட்சி அமைப்பு ஊழியர்கள் என தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 தாலுக்களில் 509 பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

கலெக்டர் ஆலோசனை

இந்த குழுக்களுக்கு திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் ஆலோசனை மற்றும் பயிற்சி நடந்தது. தாசில்தார் சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார். கலெக்டர் பாஸ்கரபாண்டியன் கலந்து கொண்டு கள ஆய்வுக்கு செல்லும் வீடுகளில் உள்ளவர்களிடம் பொறுமையாக பேசி, வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம் என்பதை புரிய வைக்க வேண்டும். வீட்டு மின் இணைப்பு எண்களை முழுமையாக குறிப்பிட வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.

இதில் துணை தாசில்தார்கள் தேன்மொழி, முரளிகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story