கல்லூரி வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பாக ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்த வேண்டும்: பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்


கல்லூரி வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பாக ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்த வேண்டும்: பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்
x

கல்லூரி வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பாக ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்த வேண்டும் என மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

கரூர்

பொதுக்குழு கூட்டம்

தாந்தோணிமலை அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் அரசு கல்லூரி ஆசிரியர் மன்றம் தமிழ்நாடு மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் சிவராமன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் குமார் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் 2023-24-ம் கல்வி ஆண்டில் வகுப்புகள் ெதாடங்குவதற்கு முன்பாக கல்லூரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடத்த வேண்டும், மாற்றுப்பணியில் ஓராண்டுக்கும் மேலாக பணியாற்றி வரும் ஆசிரியர்களின் மாற்றுப்பணியை ரத்து செய்ய வேண்டும்.

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்

2000-ம் ஆண்டில் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு உரிய ஒட்டுமொத்த பணி மூப்பு பட்டியலை விரைவாக வெளியிட வேண்டும், கல்லூரியில் காலியாக உள்ள முதல் நிலை மற்றும் 2-ம் நிலை கல்லூரி முதல்வர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், மாணவர்கள் நலன் கருதி காலியாக உள்ள கல்லூரி ஆசிரியர்களின் பணியிடத்தை விரைந்து நிரப்ப வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும், எம்.பி.எல். மற்றும் பி.ஹெச்.டி. ஊக்க ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதில் ஆட்சி குழு உறுப்பினர்கள் பேராசிரியர் சரவணன், சின்னதுரை, ஜெயமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story