நீட் தேர்வு முறைகேடுகளை தடுக்கும் நவீன வழிமுறைகளை தாக்கல் செய்யுங்கள்-சி.பி.ஐ., சி.பி.சி.ஐ.டி.க்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


நீட் தேர்வு முறைகேடுகளை தடுக்கும்   நவீன வழிமுறைகளை தாக்கல் செய்யுங்கள்-சி.பி.ஐ., சி.பி.சி.ஐ.டி.க்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

நீட் தேர்வு முறைகேடுகளை தடுக்கும் நவீன வழிமுறைகளை தாக்கல் செய்யுங்கள் என்று சி.பி.ஐ., சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை

நீட் தேர்வு முறைகேடுகளை தடுக்கும் நவீன வழிமுறைகளை தாக்கல் செய்யுங்கள் என்று சி.பி.ஐ., சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வு ஆள்மாறாட்டம்

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பான சம்பவத்தில் இடைத்தரகராக செயல்பட்டு கைதான கேரளாவைச்சேர்ந்த ரஷீத், தனக்கு ஜாமீன் கேட்டு கடந்த ஆண்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, நீட் தேர்வில் இது போன்ற ஆள்மாறாட்டம் உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்கும் வகையில் சி.பி.ஐ.யை எதிர்மனுதாரராக சேர்த்து உத்தரவிடப்பட்டது. மேலும் நீட் தேர்வில் முறைகேடுகளை தடுக்க எவ்வகையான நவீன தொழில்நுட்பங்களை அமல்படுத்தலாம் என்பது உள்பட பல்வேறு கேள்விகளை ஐகோர்ட்டு எழுப்பி இருந்தது.

நவீன வழிமுறைகள்

இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது சி.பி.ஐ. தரப்பு வக்கீல் ஆஜராகி, நீட் தேர்வு மையங்களில் தேர்வு எழுதும் ஒவ்வொருவரையும் வீடியோ பதிவு செய்வது, தேர்வு எழுதுபவர்கள், கண்காணிப்பாளர்களின் புகைப்படங்களை சரிபார்ப்பது, கண் விழித்திரை பதிவு, கைரேகை பதிவுகளை விண்ணப்பிக்கும்போதும், தேர்வு எழுதும்போதும், கவுன்சிலிங்கின்போதும் என 3 முறை சரிபார்ப்பது, பேஸ் டிடெக்டர் போன்ற நவீன கருவிகளை பயன்படுத்துவது போன்றவற்றை அமல்படுத்தினால் முறைகேடு நடக்காமல் தவிர்க்கலாம் என பல்வேறு ஆலோசனைகளை சி.பி.ஐ. வக்கீல் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வு என்பது மிக முக்கியமானது. இதில் முறைகேடு மற்றும் ஆள் மாறாட்டம் நடைபெறாமல் இனி வரும் காலங்களில் கண்டிப்பாக தடுப்பது நமது கடமை. எனவே நீட் தேர்வில் முறைகேடுகளை தடுக்க என்னென்ன நவீன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது குறித்து சி.பி.ஐ., சி.பி.சி.ஐ.டி. போலீசார் பதில் மனு தாக்கல் செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டார். அடுத்த கட்ட விசாரணையை வருகிற 22-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.


Related Tags :
Next Story