திருட்டு சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்: போடி நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்


திருட்டு சம்பவங்களை தடுக்க   கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்:  போடி நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்
x

போடி நகராட்சி பகுதியில் திருட்டு சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது

தேனி

போடி நகராட்சி கூட்டம் நடந்தது. இதற்கு நகராட்சி தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கிருஷ்ணவேணி, நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) செல்வராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

கவுன்சிலர் பிரபாகரன்:- திருட்டு சம்பவங்களை தடுக்க 33 வார்டுகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். அனைத்து வார்டுகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

தலைவர்: இந்த கோரிக்கைகள் குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

கவுன்சிலர் தனலட்சுமி:- நகராட்சியின் வரவு, செலவு மற்றும் நிதி நிலை எப்படி உள்ளது.

தலைவர்:- விரைவில் நிதி நிலை அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றார்.

கூட்டத்தில் நகராட்சி உறுப்பினர்கள், அதிகாரிகள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story