முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குசிறப்பான வரவேற்பு


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குசிறப்பான வரவேற்பு
x
தினத்தந்தி 26 Aug 2023 6:45 PM GMT (Updated: 26 Aug 2023 6:45 PM GMT)

திருவாரூருக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருவாரூர்

திருவாரூருக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

சிறப்பான வரவேற்பு

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் நாகை மாவட்டம் திருக்குவளையில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 4 மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அனைத்து துறை அதிகாரிகளுடன் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு கூட்டத்தை நடத்தினார்.

பின்னர் நேற்று மதியம் நாகையில் இருந்து காரில் புறப்பட்டு திருவாரூருக்கு வந்தார். முன்னதாக திருவாரூர் மாவட்ட எல்லையான காணூரில் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ. தலைமையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, நகர செயலாளர் பிரகாஷ், ஒன்றிய செயலாளர் தேவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அஞ்சுகத்தம்மாள் நினைவிடத்தில் மரியாதை

திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள அவருடைய இல்லத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தடைந்தார். மாலையில் காட்டூரில் உள்ள கருணாநிதியின் தாயாரும், தனது பாட்டியுமான அஞ்சுகத்தம்மாள் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் கருணாநிதி கோட்டத்திற்கு சென்று அங்கு கோட்டம் முழுவதும் சுற்றி பார்த்தார். மீண்டும் சன்னதி தெரு வீட்டுக்கு வந்தடைந்தார். நாளை ( அதாவதுஇன்று) திருவாரூர் பவித்திரமாணிக்கம் மங்கள் வரதர் மஹாலில் நடைபெறும் செல்வராசு எம்.பி. இல்ல திருமணத்தை தலைமை ஏற்று நடத்தி வைக்கிறார்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

இதனையடுத்து திருவாரூரில் இருந்து புறப்பட்டு சாலை மார்க்கமாக திருச்சி செல்கிறார். அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி திருவாரூரில்ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story