பொதுசிவில் சட்டத்தை திரும்ப பெறக்கோரிவிடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பொதுசிவில் சட்டத்தை திரும்ப பெறக்கோரிவிடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Aug 2023 6:45 PM GMT (Updated: 14 Aug 2023 6:46 PM GMT)

தூத்துக்குடியில் பொதுசிவில் சட்டத்தை திரும்ப பெறக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மத்திய மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மத்திய மாவட்ட செயலாளர் ஆட்டோ கணேசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்து உள்ள பொதுசிவில் சட்டத்தை திரும்ப பெற வேண்டும், மணிப்பூர் மாநிலத்தில் நடத்தப்பட்ட வன்முறையை கட்டுப்படுத்த தவறிய மாநில அரசையும், பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் பதவி விலக கோரியும் கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் அகமது இக்பால், மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் தமிழ் குட்டி, மாவட்ட செய்தி தொடர்பாளர் செல்வகுமார், ஒன்றிய செயலாளர் மகாராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிறுத்தை குமார், வார்டு செயலாளர்கள் டேனியல், அந்தோணிசாமி, வக்கீல் அர்ச்சுணன், தமிழர் விடியல் கட்சி சந்தனராஜ், முன்னாள் தொண்டரணி அமைப்பாளர் தமிழ் குமணன், சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் வேந்தன், தொண்டரணி மகேந்திரன், வக்கீல் பிரிவு முன்னாள் மாவட்ட அமைப்பாளர் முனிஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story