வெளிமாநில தொழிலாளர்கள் விவரங்களை பதிவு செய்யதொழிலாளர் அலுவலகத்தில் சிறப்பு :முகாம்இன்று நடக்கிறது
வெளிமாநில தொழிலாளர்கள் விவரங்களை பதிவு செய்ய தொழிலாளர் அலுவலகத்தில் சிறப்பு இன்று சிறப்பு முகாம் நடக்கிறது என்று தேனி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சிவக்குமார் தெரிவித்தார்.
தேனி
தேனி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தேனி மாவட்டத்தில் உள்ள கடைகள் மற்றும் உணவு நிறுவனங்களில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களை வெளிமாநில தொழிலாளர் வலைத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்வதற்காக தேனி தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை சிறப்பு முகாம் நடக்கிறது. முகாமை பயன்படுத்திக் கொண்டு கடைகள் மற்றும் உணவு நிறுவனங்களில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்கள் குறித்த விவரங்களை பதிவு செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story