திருச்சி, தஞ்சை வழியாக இயக்க வேண்டும்


திருச்சி, தஞ்சை வழியாக இயக்க வேண்டும்
x

திருச்சி, தஞ்சை வழியாக இயக்க வேண்டும்

நாகப்பட்டினம்

நாகூர், நாகை ரெயில் உபயோகிப்பாளர் நலச்சங்க தலைவர் மோகன், செயலாளர் நாகூர் சித்திக் ஆகியோர் திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் மனீஷ் அகர்வாலை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நாகை ரெயில் நிலைய புதிய கட்டிடம் கட்ட பணிகளை தொடங்கியதற்கும், , வெளிப்பாளையம் நடைமேடைகளை சீர் செய்யும் பணியை தொடங்கியதற்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம். பொதுமக்கள், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கீரைக்கொல்லை தெருக்கு ரெயில்வே கேட்டில் சப்வே அமைக்க வேண்டும். நாகூர் மற்றும் வெளிப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருக்கை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். திருச்சி கோட்ட மார்க்கத்தில் காரைக்கால் - தஞ்சை மார்க்கமே அதிக வருவாய் ஈட்டி தரும் பகுதியாக உள்ளதால், வருவாய் அடிப்படையில் இந்த பாதையை இரட்டை பாதையாக மாற்ற வேண்டும். காரைக்கால், நாகூர், வெளிப்பாளையம், நாகை பகுதியில் இருந்து தினசரி இரவு 7.45 மணிக்கு பிறகு திருச்சி- காரைக்கால் இடையே பயணிகள் ரெயில் இயக்க வேண்டும். தென்மேற்கு ரெயில்வே அறிவித்த பெங்களூரு - வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரெயிலை முதல்கட்டமாக திருச்சி, தஞ்சை வழியாக இயக்க வேண்டும். காரைக்காலில் இருந்து கோவைக்கு திருச்சி, பழனி, பொள்ளாச்சி வழியாக இயக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story