கழிப்பறை கட்டும் பணியை விரைந்து முடிக்கக்கோரிஆண்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்துக்கு மண்எண்ெணய் கேனுடன் வந்த தொழிலாளி
கழிப்பறை கட்டும் பணியை விரைந்து முடிக்கக்கோரி ஆண்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்துக்கு மண்எண்ணெய் கேனுடன் வந்த தொழிலாளியால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆண்டிப்பட்டி பகுதியை சோந்தவர் செல்வக்குார். கூலித்தொழிலாளி. நேற்று இவர், பேரூராட்சி அலுவலகத்துக்கு மண்எண்ணெய் கேனுடன் வந்தார். அவரை அலுவலகம் முன்பு நின்ற போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது
ஆண்டிப்பட்டி பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட சக்கம்பட்டி 12-வது வார்டு தெற்கு தெருவில் பெண்கள் கழிப்பறை இருந்தது. இந்த கழிப்பறை மராமத்து பணி செய்யாமல் இருந்ததால் மிகவும் சேதமடைந்தது. இதனால் அந்த கழிப்பறை கட்டிடத்தை பேரூராட்சி நிர்வாகம் அகற்றிவிட்டு புதிய கழிப்பறை கட்டும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.
இதில் கழிப்பறை கட்டும் இடத்தில் சிலர் கால்நடைகளை கட்டி வைத்து பராமரித்து வருகின்றனர். மேலும் சிலர் கழிப்பறை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே கழிப்பறை கட்டும் பணியை விரைந்து முடிக்கக்கோரி, மண்எண்ணெய் கேனுடன் வந்ததாக கூறினார். பின்னர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட கூடாது என்று போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இதையடுத்து அவர் பேரூராட்சி அலுவலகத்தி்ல் மனு கொடுத்துவிட்டு சென்றார்.