சேலத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு ரூ.3½ கோடியில் புதிய மண்டல அலுவலகம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம்அடிக்கல் நாட்டினார்


சேலத்தில்  இந்து சமய அறநிலையத்துறைக்கு  ரூ.3½ கோடியில் புதிய மண்டல அலுவலகம்  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம்அடிக்கல் நாட்டினார்
x

சேலத்தில் ரூ.3½ கோடியில் கட்டப்படும் இந்து சமய அறநிலையத்துறை புதிய மண்டல அலுவலகத்துக்கு காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

சேலம்

சேலம்,

சேலம் மண்டல புதிய அலுவலகம்

இந்து சமய அறநிலையத்துறை சேலம் மண்டல அலுவலகம் சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்துக்கு தனியாக என்று புதிய கட்டிடம் கட்டுவது சம்பந்தமாக கடந்த ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது. தொடர்ந்து சேலம் நெத்திமேடு பகுதியில் குகை அம்பலவாணசாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் புதிய அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை சேலம் மண்டல அலுவலக புதிய கட்டிடம் கட்டுவதற்கு நேற்று சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதையொட்டி இந்த நிகழ்ச்சி சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் செயல்பட்டு வரும் சேலம் மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது.

ரூ.3½கோடி மதிப்பு

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கார்மேகம், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மங்கையர்கரசி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும் போது, இந்து சமய அறநிலையத்துறை சேலம் மண்டல புதிய அலுவலகம் 2.80 ஏக்கர் பரப்பளவில் ரூ.3 கோடியே 65 லட்சம் மதிப்பில் கட்டப்படுகிறது. இந்த பணிகள் 18 மாதங்களில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றனர்.


Next Story