இரணியல் அருகேநகைக்கடை பெண் ஊழியரிடம் 4½ பவுன் சங்கிலி பறிப்பு

இரணியல் அருகேநகைக்கடை பெண் ஊழியரிடம் 4½ பவுன் சங்கிலி பறிப்பு
x

இரணியல் அருகே நகைக்கடை பெண் ஊழியரிடம் 4½ பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிய 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

திங்கள்சந்தை:

இரணியல் அருகே நகைக்கடை பெண் ஊழியரிடம் 4½ பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிய 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

நகைக்கடை பெண் ஊழியர்

இரணியல் அருகே உள்ள தலக்குளத்தை அடுத்த தும்பவிளையை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவருடைய மனைவி ஆஷா (வயது30). இவர் திங்கள்நகரில் உள்ள ஒரு ஜுவல்லரியில் பணிபுரிந்து வருகிறார்.

இவர் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் ஸ்கூட்டரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது காட்டுவிளை பகுதியில் செல்லும் போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அதில் ஒருவர் ஆஷாவின் கழுத்தில் கிடந்த 4½ பவுன் நகையை பறித்தான். உடனே ஆஷா திருடன், திருடன் என்று கூச்சல் போட்டார். ஆஷாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்-பக்கத்தினர் ஓடி வருவதற்குள் மர்ம நபர்கள் 2 பேரும் மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று மறைந்தனர்.

போலீசார் விசாரணை

இதுபற்றி ஆஷா இரணியல் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து நகையை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளல் தப்பிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி, தேடி வருகிறார்கள்.

Next Story