மொபட் உரிமையாளருக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு


மொபட் உரிமையாளருக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு
x

திருவாரூரை சேர்ந்த மொபட் உரிமையாளருக்கு ரூ.3 லட்சத்தை இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.

திருவாரூர்

திருவாரூர்:

திருவாரூரை சேர்ந்த மொபட் உரிமையாளருக்கு ரூ.3 லட்சத்தை இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.

மொபட் திருட்டு

திருவாரூர் தெற்கு மடவளாகத்தை சேர்ந்த கண்ணபிரான் என்பவரது மொபட் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் 24-ந் தேதி திருவாரூர் தலைமை தபால் நிலையத்திற்கு முன்பு திருட்டு போனது. இதுகுறித்து திருவாரூர் டவுன் போலீசில் கண்ணபிரான் புகார் அளித்தார்.மேலும் வாகன பதிவு நகல், காப்பீட்டு நகல், முதல் தகவல் அறிக்கை நகல் ஆகியவற்றை ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்தின் திருவாரூர் கிளை அலுவலகத்தில் கொடுத்து தான் காப்பீடு செய்துள்ள வாகனத்திற்கு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டுமென விண்ணப்பித்திருந்தார்.அந்த இன்சூரன்ஸ் நிறுவனத்தினர், ெமாபட்டை கண்டுபிடிக்க முடியவில்லை என்ற சான்றிதழை போலீஸ் நிலையத்தில் இருந்து வாங்கி வருமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

காலதாமதம்

அதற்கான சான்றிதழ் பெற்ற கண்ணபிரான் அதனை கடந்த 2020-ம் ஆண்டு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ஒப்படைத்தார். சில நாட்களுக்கு பிறகு அந்த இன்சூரன்ஸ் நிறுவனம் தாங்கள் போதிய ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை என்றும், மேலும் அதிக காலதாமதமாகி விட்டதால் தங்களுக்கு இன்சூரன்ஸ் தொகை வழங்க இயலாது என்றும் தெரிவித்துள்ளது.தனக்கு இன்சூரன்ஸ் தொகை வழங்க மறுக்கும் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடந்த 2021-ம் ஆண்டு திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் கண்ணபிரான் வழக்கு தொடர்ந்தார்.

ரூ. 3 லட்சம் இழப்பீடு

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அப்போது இன்சூரன்ஸ் நிறுவனம் மொபட் காணாமல் போன நாளிலிருந்து 9 சதவீத ஆண்டு வட்டியுடன் சேர்த்து கண்ணபிரானுக்கு இன்சூரன்ஸ் தொகையை வழங்க வேண்டும். இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சேவை குறைபாடு மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறை போன்றவற்றிற்காக ரூ.10 ஆயிரம் மற்றும் இழப்பீட்டு தொகையாக ரூ.2 லட்சம் வழங்கிட வேண்டும்.மேலும், 3 ஆண்டுகளுக்கு மேல் காலதாமதம் செய்தமைக்காக கூடுதல் இழப்பீடு தொகையாக ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் என ஆணைய தலைவர் சக்கரவர்த்தி உத்தரவிட்டுள்ளார்.மேலும் இந்த உத்தரவு கிடைக்க பெற்ற 6 வாரத்திற்குள் கண்ணபிரானுக்கு இந்த முழு தொகையை கொடுக்க வேண்டுமென்றும், தவறும் பட்சத்தில் உத்தரவு பிறப்பித்த நாளிலிருந்து 6 சதவீத வருட வட்டி சேர்த்துக் கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.



Next Story