தொழிலாளி வீட்டுக்கு தீ வைத்த டிரைவர் கைது


தொழிலாளி வீட்டுக்கு தீ வைத்த டிரைவர் கைது
x

தொழிலாளி வீட்டுக்கு தீ வைத்த டிரைவர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

நெல்லை மேலப்பாளையத்தை அடுத்த மேலநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சுடலைமணி. தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர் சுடலைமணி வீட்டின் கதவில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி ஓடிவிட்டார். இதைக்கண்ட வீட்டில் உள்ளவர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மேலப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கு பாட்டில் துகள்கள் சிதறி கிடந்தன. எனவே பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருக்கலாம்? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று அதே பகுதியை சேர்ந்த டேங்கர் லாரி டிரைவர் முருகன் (வயது 40) என்பவரை கைது செய்தனர். குழந்தை விளையாடியதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக முருகன், சுடலைமணி வீட்டுக்கு தீ வைத்தது தெரியவந்தது.


Next Story