தேனி மாவட்ட நிர்வாகத்துக்கு மாநில கல்வி கொள்கை தொடர்பான கருத்துகளை அனுப்பலாம்


தேனி மாவட்ட நிர்வாகத்துக்கு  மாநில கல்வி  கொள்கை தொடர்பான கருத்துகளை அனுப்பலாம்
x

தேனி மாவட்ட நிர்வாகத்துக்கு மாநில கல்வி கொள்கை தொடர்பான கருத்துகளை அனுப்பலாம் என்று கலெக்டர் தெரிவித்தார்

தேனி

தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது-

தமிழ்நாட்டில் மாநிலத்திற்கென தனித்துவமான மாநில கல்வி கொள்கை வகுப்பதற்காக நீதிபதி முருகேசன் தலைமையில் ஒரு உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் உயர் கல்வி, தேர்வு முறைகளில் சீர்திருத்தம் உள்ளிட்ட 10 வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டு மாநில கல்வி கொள்கை தயார் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த குழுவானது ஓராண்டில் மாநில கல்வி கொள்கையை தயார் செய்து இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வருகிற 21-ந்தேதி ஆய்வுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் தேனி மாவட்டம் சார்பில், மாநில கல்வி கொள்கை சார்பான பல்வேறு காரணிகள் குறித்து கருத்துகள் சமர்ப்பிக்கப்பட உள்ளன. இதற்கு தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம்.

எனவே மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்கள், கல்வியாளர்கள், தன்னார்வலர்கள், மாணவ மாணவிகள், பெற்றோர் ஆகியோர் தங்களது கருத்துகளை septheni@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். கருத்துகளை வருகிற 20-ந்தேதிக்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story