கடமலைக்குண்டு வழியாக தேனிக்குகூடுதல் அரசு பஸ்கள் இயக்க வேண்டும்:பொதுமக்கள் கோரிக்கை


கடமலைக்குண்டு வழியாக தேனிக்குகூடுதல் அரசு பஸ்கள் இயக்க வேண்டும்:பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 18 March 2023 6:45 PM GMT (Updated: 2023-03-19T00:16:41+05:30)

கடமலைக்குண்டு வழியாக தேனிக்கு கூடுதல் அரசு பஸ்கள் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

தேனி

கடமலைக்குண்டு கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு அய்யனார்புரம், அண்ணாநகர், ஆத்துப்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். வெளியூர் மாணவ-மாணவிகள் அனைவரும் அரசின் இலவச பஸ் பயண சீட்டு மூலம் வருகின்றனர்.

இந்நிலையில் மாலை நேரம் மயிலாடும்பாறையில் இருந்து கடமலைக்குண்டு வழியாக தேனிக்கு 2 அரசு டவுன் பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் பள்ளி முடிந்து ஊர்களுக்கு திரும்பும் மாணவ-மாணவிகள் டவுன் பஸ்களில் இடம் பிடிக்க ஒருவரை ஒருவர் முண்டியடித்து கொண்டு ஏறும் நிலை உள்ளது.

மேலும் இடப்பற்றாக்குறை காரணமாக மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியவாறு ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். எனவே பள்ளி மாணவ-மாணவிகள் நலன் கருதி மாலை நேரங்களில் கடமலைக்குண்டு வழியாக தேனிக்கு கூடுதல் டவுன் பஸ்கள் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story