கடமலைக்குண்டு வழியாக தேனிக்கு கூடுதல் அரசு டவுன் பஸ்கள் இயக்க கோரிக்கை


கடமலைக்குண்டு வழியாக தேனிக்கு  கூடுதல் அரசு டவுன் பஸ்கள் இயக்க கோரிக்கை
x

கடமலைக்குண்டு வழியாக தேனிக்கு கூடுதலாக அரசு டவுன் பஸ்கள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர்

தேனி

கடமலைக்குண்டுவில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு அய்யனார்புரம், அண்ணாநகர், ஆத்துப்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் தினந்தோறும் மாலை மயிலாடும்பாறையில் இருந்து கடமலைக்குண்டு வழியாக தேனிக்கு 2 அரசு டவுன் பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது.

இதனால் பள்ளி முடிந்து ஊருக்கு திரும்பும் மாணவர்கள் இடம் பிடிப்பதற்காக முண்டியடித்து ஒருவரையொருவர் தள்ளி கொண்டு பஸ்சில் ஏறும் அவல நிலை உள்ளது. மேலும் இடப்பற்றாக்குறை காரணமாக மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியவாறு ஆபத்தான முறையில் பயணம் செய்தும் வருகின்றனர். எனவே பள்ளி மாணவ-மாணவிகள் நலன் கருதி மாலை நேரங்களில் கடமலைக்குண்டு வழியாக தேனிக்கு கூடுதல் டவுன் பஸ்கள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story