ரோந்து பணி மேற்கொள்ள12 புதிய மோட்டார் சைக்கிள்கள்:போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்


ரோந்து பணி மேற்கொள்ள12 புதிய மோட்டார் சைக்கிள்கள்:போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்
x
தினத்தந்தி 15 March 2023 12:15 AM IST (Updated: 15 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் ரோந்து பணி மேற்கொள்வதற்காக 12 புதிய மோட்டார்சைக்கிள்களை போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்.

தேனி

தேனி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் சம்பவ இடத்துக்கு உடனடியாக செல்வதற்கும், 24 மணி நேரமும் ரோந்து பணி மேற்கொள்ளவும் மோட்டார் சைக்கிள் ரோந்து படை தொடங்கப்பட்டு அதில் போலீசார் பணியாற்றி வருகின்றனர். இதற்காக மாவட்டத்தில் 41 மோட்டார் சைக்கிள் ரோந்து படை உள்ளன. இந்த ரோந்து படையினர் பயன்படுத்தும் சில வாகனங்கள் பழைய நிலையிலும், அடிக்கடி பழுதாகியும் வந்தன.

இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே மேற்கொண்ட நடவடிக்கையால் புதிதாக 12 மோட்டார் சைக்கிள்கள் தேனி மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டன. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், மோட்டார் சைக்கிள்களை ரோந்து படையினரிடம் ஒப்படைத்து ரோந்து பணியை போலீஸ் சூப்பிரண்டு நேற்று தொடங்கி வைத்தார். புதிதாக வழங்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களில் ஒலி பெருக்கி, சைரன், வாக்கி டாக்கி போன்றவை பொருத்தப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியின் போது போலீஸ் துணை சூப்பிரண்டுகள் சக்திவேல், இளமாறன், ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், ஜெயச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.


Related Tags :
Next Story