பூட்டி கிடக்கும் நூலகத்தை திறக்க வேண்டும்; பொதுமக்கள் கோரிக்கை


பூட்டி கிடக்கும் நூலகத்தை திறக்க வேண்டும்; பொதுமக்கள் கோரிக்கை
x

பூட்டி கிடக்கும் நூலகத்தை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது கல்லேரி. இங்கு தச்சம்பட்டு சாலை, வடக்கு தெரு, தெற்கு தெரு, பள்ளிக்கூடத் தெரு, கோவில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இப்பகுதியை சேர்ந்த படித்த இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருத்தில் கொண்டு கடந்த சில வருடங்களுக்கு முன்பு நூலக கட்டிடம் கட்டப்பட்டது.

இந்த கட்டிடத்தில் அன்றாடம் நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்ளும் வகையில் செய்தித்தாள்கள் மற்றும் பல்வேறு நூல்கள் படிப்பதற்காக திறந்து செயல்பட்டு வந்தது. ஆனால் தற்போது எந்த ஒரு பயன்பாடும் இல்லாமல் நூலகம் பூட்டியே கிடந்தது. எனவே இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் நலன் கருத்தில் கொண்டு பூட்டி கிடக்கும் நூலக கட்டிடத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story