45 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
45 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை
பேரையூர்,
மதுரை மாவட்டம் சாப்டூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார், அரசால் தடை செய்யப் பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என கண்காணிக்க ரோந்து சென்றனர். அப்போது வேப்பம ்பட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ரோந்து சென்ற போலீசார் அந்த வீட்டுக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட 44 கிலோ 800 கிராம், புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதற்காக வைத்து இருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். இது குறித்து சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேப்பம் பட்டியை சேர்ந்த காளீஸ் வரன் (வயது 36) என்பவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story