புகையிலை ஒழிப்பு தின அமைதி பேரணி
நெல்லையில் புகையிலை ஒழிப்பு தின அமைதி பேரணி நடந்தது.
நெல்லை:
புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நேற்று நெல்லை பிரம்மகுமாரிகள் அமைப்பின் சார்பில் போதை இல்லாத தமிழகம் என்ற தலைப்பில் பிரம்மகுமாரிகளின் அமைதி ஊர்வலம் பாளையங்கோட்டை தலைமை தபால் அலுவலகம் முன்பு தொடங்கி வைக்கப்பட்டது. இதில் மது, புகை பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் எவை, ராஜயோக தியானத்தின் மூலம் தீய பழக்கங்களில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வது எப்படி? என்பது பற்றி பிரம்ம குமாரிகள் சேவை ஒருங்கிணைப்பாளர் கெடன் சிவபாலன் விளக்கம் அளித்தார்.
நெல்லை பிரம்மகுமாரிகள் அமைப்பின் பொறுப்பாளர் புவனேஸ்வரி, நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார், நெல்லை சர்வசமய கூட்டமைப்பின் தலைவர் சிதம்பரம், செயலாளர் கணபதி சுப்பிரமணியன் ஆகியோர் புகையிலை ஒழிப்பு கண்காட்சி வாகனத்தையும், அமைதி ஊர்வலத்தையும் தொடங்கி வைத்தனர். புகையிலை ஒழிப்பு படவிளக்க கண்காட்சி வாகனம் நேற்று நெல்லையை சுற்றியுள்ள பகுதிகளிலும், இன்று (திங்கட்கிழமை) அம்பை பகுதிகளிலும், நாளை (செவ்வாய்க்கிழமை) தென்காசி பகுதிகளிலும் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.