புகையிலை பதுக்கியவர் கைது
நெல்லை அருகே புகையிலை பதுக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி
முன்னீர்பள்ளம்:
நெல்லை அருகே உள்ள மேலஓமநல்லூரில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக முன்னீர்பள்ளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் மேலஓமநல்லூருக்கு சென்று செல்வகுமார் (வயது 45), என்பவர் தனது கடையில் விற்பனை செய்வதற்காக புகையிலை பாக்கெட்டுகளை பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லைநாகராஜன் வழக்கு பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்தார். அவரிடம் இருந்து 16 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story