புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
களக்காடு அருகே புகையிலை பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி
களக்காடு:
களக்காடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் வடமலைசமுத்திரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது பத்மநேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சிவசுப்பிரமணியன் (வயது 63) என்பவர் அவரது கடை முன்பு நின்று கொண்டு, சிலருக்கு வெள்ளை சாக்கு பையில் இருந்து புகையிலை பாக்கெட்டுகளை எடுத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். போலீசாரை பார்த்ததும் அவர்கள் தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து போலீசார் சிவசுப்பிரமணியனை கைது செய்து, அவரிடம் சோதனை நடத்தினர். இதில் அவர் பதுக்கி வைத்திருந்த 276 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story