புகையிலை விற்றவர் கைது


புகையிலை விற்றவர் கைது
x

பேட்டையில் புகையிலை விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

பேட்டை:

பேட்டை எம்.ஜி.பி. வடக்கு தெருவை சேர்ந்தவர் சிந்தா மதார். இவருடைய மகன் மீரான் மைதீன் (வயது 43). இவர் சுத்தமல்லியில் கடை வைத்துள்ளார். இவரது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக சுத்தமல்லி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் அங்கு சென்று மீரான் மைதீனை கைது செய்தார். மேலும் கடையில் இருந்த 17 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தார்.

1 More update

Next Story